×

மல்லுவுட்டுக்கு திரும்பினார் அனுபம் கெர்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இதில் திலீப்புக்கு ஜோடியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அனுபம் கெர் நடிப்பார் என முன்பு கூறப்பட்டது. அது தற்போது உறுதியாகியுள்ளது. மலையாளத்தில் பிரஜா, பிரணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அனுபம் கெர், கடைசியாக 9 வருடங்களுக்கு முன் பிளஸ்சி இயக்கத்தில் களிமண்ணு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இப்போதுதான் மல்லுவுட்டுக்கு திரும்பியுள்ளார். திலீப்புடன் அவர் நடித்த காட்சிகளை இயக்குனர் ரபி நேற்று படமாக்கினார்.

Tags : Anupam Kher ,Mallwood ,
× RELATED மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை